17ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடு மற்றும் பொன்விழா

14 -16 ஆனி 2024
யாழ்ப்பாணம், இலங்கை

கருப்பொருள்: நவீன தொழில் நுட்பமும் தமிழர் பண்பாட்டுத் தாக்கமும்

Image

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

உலகத் தமிழ் இனத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்கும் உயர் நோக்குடனும் தமிழர் வாழும் இடங்களில் தலைநிமிர்ந்து வாழவேண்டும் எனும் குறிக்கோளுடனும் அரசியற்சார்பற்று இன, மத பேதங்களைக் கடந்து, தமிழ்ப் பண்பாட்டாளர் என்னும் ஒரே நோக்கத்தில் செயற்படவேண்டும் எனும் உயர்ந்த கொள்கையுடனும், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றும் வகையிலும், தமிழர் வாழும் நாடுகளில் தமிழ் கற்பிக்கும் நல்நோக்குடனும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தைத் திங்கள் சுறவம் 08.01.1974, ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழ்ராய்ச்சி மாநாட்டின்போது தோற்றுவிக்கப்பட்ட இவ்இயக்கம், தமிழர்களை ஒன்றிணைப்பதில் வெற்றிகண்ட பன்னாட்டு இயக்கமாகும்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தோற்றம்

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, 1974 ஆம் ஆண்டு, இலங்கையில் யாழ்ப்பாண நகரில், வீரசிங்கம் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டு இறுதிநாளில், தமிழ் ஆர்வமிக்கப் பெருந்தகைகளால் இலாப நோக்கற்ற, அரசியல் சாராத, மக்கள் தொண்டு நிறுவனமாகத் தமிழ்ப் பண்பாடு போற்றும் அமைப்பாக, 1974 ஜனவரி 8 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்கம் உருவாக இலங்கையைச் சேர்ந்த இரா.கனகரத்தினம் அவர்கள் முதன்மையானவராகச் செயற்பட்டார், அவருடன் பேராசிரியர் சு.வித்தியானந்தன், தில்லிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சாலை. இளந்திரையன், பேராசிரியர் சாலினி இளந்திரையன், தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த சோதிநாதன், திருமதி காமாட்சி சோதிநாதன், மேலும் இலங்கையைச் சேர்ந்த தனிநாயகம் அடிகளார் முதலிய உலகப் பேராளர்களை இணைத்து செயற்படத்தொடங்கியது. இவ்வியக்கம் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களிடையே, நமது இளைய தலைமுறையினக்குத் தமிழ்மொழி, தமிழப் பண்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பரப்புதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் முதலிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 45 ஆண்டுகளாக உலகளவில் செயல்பட்டு வருவதோடு, 42 நாடுகளில் கிளைகளையும் மற்ற நாடுகளின் உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு மேலெழுகின்றது. இவ்வாறு பரந்து விரிந்து நிற்கும் பண்பாட்டு இயக்கம், தற்பொழுது 8 நாடுகளில் வினைத்திறனுடன் இயங்குகின்றது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் மேலெழும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், குறும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களது முயற்சியில் 1974 ஆம் ஆண்டு, ஐந்து நாட்டுப் பேராளகளால் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சாலை இளந்திரையன் இரண்டாண்டு செயற்பட்டார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்த இதன் இடைக்காலத் தலைவராக மலேசியா கிளையின் இர. ந.வீரப்பனாரும், பொது செயலாளராக இரா.கனகரத்தினம் அவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களது முயற்சியால் இரண்டு வருடத்தில் பத்து நாடுகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளைகள் வேரூன்றின.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடுகள்

imtc imtc imtc imtc

1977 ஆம் ஆண்டு, முதலாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, இந்தியாவில் சென்னையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் தமிழக முதல்வர் திரு. எம். ஜி இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

1980 ஆம் ஆண்டு, மொரிசியசு நாட்டில் இரண்டாவது தமிழ்ப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அங்கு மொரிசியசு பிரதமர் திரு. ராம் யலா சிவசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மூன்றாவது பன்னாட்டு தமிழ் மாநாடு, இந்தியாவின் சேலத்தில் 1985 டிசம்பர் 13 தேதி முதல் 15 தேதி வரை நடைபெற்றது. 15 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், மாநில அமைச்சர் பங்கேற்றார்.

நான்காவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 தேதி முதல் 31 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்றது, இம்மாநாட்டில் அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஐந்தாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, ஆஸ்திரேலியாவில் 1992 அக்டோபர் 3 தேதி முதல் 4 தேதி வரை நடைபெற்றது.

ஆறாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, கனடாவில் 1996 ஆகஸ்ட் 24 தேதி முதல் 26 தேதி வரை நடைபெற்றது.

ஏழாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மற்றும் வெள்ளி விழா என்பன 1999 ஆகஸ்ட் 27 தேதி முதல் 29 தேதி வரை இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெற்றது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், முதன் முறையாக கனடவில், இலாப நோக்கற்ற கனடா சங்கங்களின் சட்டத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த சி. செல்லையா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த சி. செல்லையா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

எட்டாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, தென்னாப்பிரிக்காவில், 2001 டிசம்பர் 13 தேதி முதல் 15 தேதி வரை நடைபெற்றது. "நாம் இன்றும் என்றும் தமிழால் கூடி உயர்வோம்" என்றக் பொருண்மையில் மாநாடு இடம்பெற்றது. இம்மாநாடுக்கு துணை அமைச்சர் திரு. ராயல் ராதாகிருஷ்ணன் படையாட்சி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பண்பாட்டு இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மலேசியா ப.கு. சண்முகம் அவர்கள் இயக்கத்தின் இடைக்கால அகிலத் தலைவராக 01.01.2004 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, ஒன்பதாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டினைப் புதுச்சேரியில் "தமிழரும் தமிழியமும்" என்னும் பொருண்மையில் 2004 ஆகஸ்ட் 14 தேதி முதல் 16 தேதி வரை நடத்தினார். இதில் முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பத்தாவது பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் 2007 ஜூலை 20 தேதி முதல் 22 தேதி வரை கோலாலம்பூரில் உள்ள, மலாய் பல்கலைக்கழகத்தில் "புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் அன்றும் இன்றும்" என்ற பொருண்மையில் இடம்பெற்றது.

பதினோராவது பன்னாட்டு தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, பிரான்சு தலைநகர் பாரிஸில் 2011 செப்டம்பர் 24 தேதி முதல் 25 தேதி வரை இடம்பெற்றது. இம்மாநாடு முனைவர் வே. கோவிந்தசாமி, வேலுப்பிள்ளை ஆகியோரின் முயற்சியால் நடைபெற்றது.

பனிரெண்டாவது பன்னாட்டுத் தமிழ்க் கல்வி மாநாடு, 2012 ஆகஸ்ட் 24 தேதி முதல் 26 தேதி வரை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வி.சு.துரைராஜா முயற்சியினால், சென்னை எத்திராஜ் கல்லூரியில் "கற்பித்தலில் எதிநோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்" என்ற பொருண்மையில் இடம்பெற்றது. இம்மாநாடுக்கு முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி குழுத் தலைவராகவும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் து. இராஜா மாநாட்டுப் பொருளாளராகவும் பொறுப்பேற்று இம்மாநாட்டினை முன்கொண்டு சென்றனர்.

12வது பன்னட்டுத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மற்றும் 40 வது ஆண்டு விழா ஜெர்மனியில் 2014 அக்டோபர் 4 தேதி முதல் 5 தேதி வரை நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு மாவை.சோ சேனாதிராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இம்மாநாட்டில் கருத்தொருமித்த வகையில் தலைவர் தெரிவு செய்யப்படாததால் ஆலோசராக திரு மாவை சோ. தங்கராஜா நியமிக்கப்பட்டார். அவருடைய முயற்சியினால் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் புதுச்சேரியில் 2016 சனவரி 16 தேதி முதல் 17 தேதி வரை புதுச்சேரியில் பன்னாட்டு தமிழ்ப் பண்பாட்டு சிறப்பு மாநாடு மற்றும் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் என்பன கூட்டப்பட்டன.. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 2017 ஆகஸ்ட் 5 தேதி முதல் 6 தேதி வரை 13 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

13 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
இம்மாநாடுக்கு இந்தியா, கனடா,அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சுசர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், இலங்கை, குவைத், மற்றும் சிங்கப்பூர், ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200 அறிஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாடு 10 சிறப்பு அமர்வுகளைக் கொண்டமைந்ததோடு, 60 ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேராளர்கள் உலகத் தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
சுவிட்சர்லாந்து நாட்டின் பாசில் நகரில் நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதின்படி, 14 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு, புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதி தமிழியற்புலம் மற்றும் மானிடவியல் துறையோடு, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடத்திய மாநாடு, 2020 பிப்ரவரி 06 தேதி முதல் 07 தேதி வரை புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

15 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 15ஆவது மாநாடு, 2022 அக்டோபர் 5 தேதி முதல் 6 தேதி வரை தெள்ளார் நந்திவர்மன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

16 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு

இரண்டாவது முறையாக மொரிசியசு நாட்டில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 16ஆவது மாநாடு, 2023 செப்டம்பர் 5 தேதி முதல் 6 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள் மொரிசியசு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடுக்கு 11 நாடுகளைச் சேர்ந்த 160 பேராளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

17 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் பொன்விழாவும்

மொரிசியசு பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவும் 17 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு பன்னாட்டு மாநாடும் யாழ்ப்பாணத்தில், 2024 சூன் 14 தேதி முதல் 16 தேதி வரை நடைபெறவுள்ளன.
கருப்பொருள் : நவீனத் தொழில் நுட்பமும் தமிழர் பண்பாட்டுத் தாக்கமும்
ஆய்வுப்பிரதேசம் :

  • தமிழரின் தொழில்நுட்ப யுத்திகள்
  • தமிழரின் இணையத் தொழில்நுட்பம்
  • புலம்பெயர் தமிழர் தொழில்நுட்ப வாய்ப்புகள்
  • தமிழரின் தொழில்நுட்ப சவால்கள்
  • செயற்கை நுண்ணுறிவுத் தாக்கம்
  • இணையவழிப் பண்பாட்டு பரிமாற்றங்கள்

பதிவுக் கட்டணம்

இலங்கைப் பேராளர் 2000 SLR
(இரு நாட்கள் மாநாட்டு நிகழ்விடத்தில் உணவு, மாநாட்டு புத்தகம் மற்றும் பை)

இந்தியப் பேராளர் USD 150
(யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு நிகழ்விடத்திற்கு அழைத்து வருதல், மூன்று நாட்கள் தங்குமிடம், இரு நாட்கள் மாநாட்டு நிகழ்விடத்தில் உணவு, மாநாட்டு புத்தகம் மற்றும் பை, ஒரு நாள் யாழ்ப்பாணச் சுற்றுலா உட்பட)

மலேசிய பேராளர் USD 200
(கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு நிகழ்விடத்திற்கு அழைத்து வருதல், மூன்று நாட்கள் தங்குமிடம், இரு நாட்கள் மாநாட்டு நிகழ்விடத்தில் உணவு, மாநாட்டு புத்தகம் மற்றும் பை, ஒரு நாள் யாழ்ப்பாணச் சுற்றுலா உட்பட)

மற்ற வெளிநாட்டினர் USD 300
(கொழும்பு அல்லது யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு நிகழ்விடத்திற்கு அழைத்து வருதல், மூன்று நாட்கள் தங்குமிடம், இரு நாட்கள் மாநாட்டு நிகழ்விடத்தில் உணவு, மாநாட்டு புத்தகம் மற்றும் பை, ஒரு நாள் யாழ்ப்பாணச் சுற்றுலா உட்பட)

யாழ்ப்பாணச் சுற்றுலா
ஞாயிற்றுக் கிழமை 16.6.2024

  • பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள்: 30.04.2024
  • பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி
  • The Conference Registration Fee including Accommodation for three nights is USD150 for Indian delegates, USD 200 for Malaysian delegates, USD300 for other countries, Virtual Participation is USD20/-, Local delegates: 2000 SLR Registration will be closed on 30.4.2024
  • Contact email: imtcuk2020@gmail.com.
  • Individual registration payment can be made:
  • Name: World Tamil Cultural Centre
  • Name of the Bank: People Bank, Tellippalai, Sri Lanka
  • Account No: 031100160034219

Contact Details

Accommodation and Finance: Dr. T. Varathan, Mobile:

Acceptance for presentation: Dr. Murugu Thayanithi, Mobile:

International delegates: Mr. Mavai So. Thangarajah, Mobile:

  • Email: imtc2020@gmail.com
IMTC